ஏமனில் கடந்த 15-ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படை நடத்திய விமானத் தாக்குதலில் 31 பேர் பலியானதை ஐ.நா உறுதி செய்துள்ளது.
ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்-ஜாஃப் நகரில் கடந்த 15ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படைகள் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 19 சிறுவர்கள் உட்பட 31 பொதுமக்கள் பலியானதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் ஐநாவின் யுனிசெப் அமைப்பு இதனை தற்போது உறுதி செய்துள்ளது. முன்னதாக சவுதிக்கு சொந்தமான டொர்னாடோ ரக போர் விமானத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடி தரும் விதமாக தான் இந்த விமானதாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.