ரெஸ்லிங் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்டர்டேக்கர் அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது
ரெஸ்லிங் பொழுதுபோக்கு விளையாட்டின் சகாப்தமாக 30 வருடங்கள் கருதப்பட்டு வந்தவர் அண்டர்டேக்கர். இவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பப்பட்டு வரும் திரைப்படம் “அண்டர்டேக்கர் டி ஃபைனல் ரைட்” இந்த ஆவணப்படத்தின் கடைசி பகுதியில் தனக்கு மீண்டும் ரெஸ்லிங் மேடையில் ஏறும் எண்ணம் இல்லை என குறிப்பிட்டு இருப்பார்.
என்றும் முடியாது என சொல்லக் கூடாது. ஆனால் இந்தக் கட்டத்தில் எனது வாழ்க்கையில் மீண்டும் அந்த மேடையில் ஏறும் எண்ணம் இல்லை. பயணத்தை முடிக்கும் நிலையிலேயே நான் இருக்கின்றேன். ஜெயிப்பதற்கு எதுவும் இல்லை. நான் சாதிக்க எதுவும் இல்லை. ஆட்டம் மாறிப்போனது. இதுதான் சரியான நேரம் என தோன்றுகிறது. புதியவர்கள் வருவதற்கான காலம் இது. இதனை புரிந்துகொள்ள இந்த ஆவணப்படம் எனக்கு உதவியுள்ளது.
வாழ்க்கையில் இருக்கும் பெரும் பாகத்தை பார்ப்பதற்கு எனது கண்களை இது திறந்து வைத்துள்ளது என அண்டர்டேக்கர் பேசியுள்ளார். 1990 ஆம் ஆண்டு உலக ரெஸ்லிங் பொழுதுபோக்கு விளையாட்டில் களமிறங்கிய அண்டர்டேக்கரின் இயற்பெயர் மார்க் காலவே இதுவரை 27 ரெசில்மேனியா போட்டிகளில் சண்டையிட்ட அண்டர்டேக்கர் 25 போட்டிகளில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.