Categories
உலக செய்திகள்

கொரோனாவால்… 10 நாடுகளுக்கு பெரும் ஆபத்து… ஐநா எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலக அளவில் பஞ்சம் இரட்டிப்பாகும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் காரணமாக விகிதாச்சாரத்தின்  பரவலான பஞ்சத்தால் உலகம் ஆபத்தில் இருக்கிறது என ஐநா உலக உணவுத்திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணமாக பசியால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 135 மில்லியனில் இருந்து 250 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 அதாவது,  மோதல், பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட ஏமன், காங்கோ ஜனநாயக குடியரசு, ஆப்கானிஸ்தான், வெனிசுலா, எத்தியோப்பியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, நைஜீரியா மற்றும் ஹைட்டி ஆகிய 10 நாடுகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. தெற்கு சூடான் நாட்டில் கடந்த ஆண்டு 61 சதவீத மக்கள் உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா உலக உணவுத்திட்டம் வெளியிட்ட புதிய அறிக்கை தெரிவிக்கிறது..

கொரோனா வருவதற்கு முன்பே, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவின் சில பகுதிகள் ஏற்கனவே வறட்சி மற்றும் மோசமான வெட்டுக்கிளிகள் பயிர்களை அழித்ததனால் ஏற்பட்ட கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டன.. பேரழிவை தவிர்ப்பதற்கு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |