அமெரிக்கா இதுவரை 35.5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை சுமார் 110 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக வழங்க உறுதியளித்திருந்தார் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை அமெரிக்கா 35.5 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை சுமார் 110 நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசிகள் அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை அளவுக்கு சமமானது.
அதேபோல் 5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.