ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து 1.5 பில்லியன் டாலர் நிதி உதவியை முடக்கியுள்ளது அமெரிக்கா.
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கியதை அடுத்து, தாலிபான்கள் எளிதாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டனர்.. இனி அந்த நாட்டில் தலிபான்கள் தான் செய்வார்கள் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது..
அந்நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.. சர்வதேச நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளை மீட்டு வருகின்றனர்.. தலிபான்கள், நாங்கள் எதிரிகளை சம்பாதிக்க விரும்பவில்லை எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று சர்வதேச நாடுகளை கேட்டுள்ளது..
இதற்கிடையே சீனாவும் பாகிஸ்தானும் தலிபான் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளது. ரஷ்யா தலிபான்களின் செயல்பாட்டை பொருத்து எங்களது முடிவு இருக்கும் என்று கூறியுள்ளது..
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து 1.5 பில்லியன் டாலர் நிதி உதவியை முடக்கியுள்ளது அமெரிக்கா.. அதேபோல உலகவங்கி, சர்வதேச நிதியத்தின் நிதியுதவியும் முடக்கப்பட்டுள்ளது..