அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியா மீதான தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா எந்த விதமான முடிவும் எடுக்கவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளது.
S-400 ஏவுகணை தடுப்பு உபகரணங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதால் இந்தியாவிற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறுகையில் இந்த தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ரஷ்யாவுடன் தங்கள் நட்பு மற்றும் கூட்டாளி நாடுகள் ராணுவ கொள்முதல்களை நடத்தினால் CAATSA எனப்படும் அமெரிக்காவின் தடைகள் அந்த நாடுகள் மீது பாயும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யா ராணுவ தளவாடத்தை இந்தியாவிற்கு வழங்குவது பற்றிய கேள்விக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பதில் அளித்துள்ளார். அதில் அனைத்து நாடுகளுக்கும் CAATSA தடை பொதுவானது ஒன்று. எனவே அந்த தடையில் இருந்து எந்த நாட்டிற்கும் விதிவிலக்கு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்தியா மீது எந்த விதமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.