Categories
உலக செய்திகள்

அமெரிக்கா தயாராகி கொண்டிருக்கிறது..! விரைவில் அறிவிக்கப்படும் பொருளாதார தடை… வெளியான பரபரப்பு தகவல்..!!

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க தயாராகி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக கருதும் அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்திருந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜெனீவாவில் வைத்து ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து இணக்கமான பேச்சுவார்த்தை நடந்ததாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதிக்க தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் “ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி வருவதாகவும், கூடிய விரைவில் பொருளாதார தடை அறிவிப்பு வெளியாகும், அதனைத் தொடர்ந்து ரசாயன ஆயுதங்கள் ரீதியாக பொருளாதார தடைகளும் விதிக்கப்படும்” என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |