Categories
உலக செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய அமெரிக்கா…. அலற போகும் சீனா…. உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

வூஹானின் ஆய்வுக் கூடத்திலிருந்து தொற்று பரவியதா என்பது குறித்து அமெரிக்கா விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறியும் என டிரம்ப் கூறியுள்ளார்

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் டெலிவிசன் செய்தி ஒன்றை வெளியிட்டு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது.

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்த பொழுது இந்த செய்தி எதிரொலித்தது. அப்போது அதிபரிடம் நிருபர் ஒருவர் “ஆய்வுக் கூடத்திலிருந்து கொரோனா தொற்று பரவியுள்ளது என வெளியான தகவல் தொடர்பாக அமெரிக்கா விசாரணை மேற்கொள்கிறதா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த டிரம்ப் “அந்த தகவலில் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது எனவே நாங்கள் அதனை விசாரிக்கிறோம் இன்னும் நிறைய பேர் அதனை விசாரித்து வருகிறார்கள். வினோதமான விஷயங்கள் அதிகம் நடக்கின்றன. அதேபோன்று விசாரணைகளும் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் நடந்தது என்ன என்பதை கண்டுபிடிக்க போகிறோம்.

சீனாவில் அந்த வைரஸ் எங்கிருந்து வந்தாலும் எப்படி தோன்றியிருந்தாலும் அதனால் 210 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வூஹானில் இருக்கும் 4ஆம் நிலை ஆய்வுக்கூடத்திற்கு அமெரிக்கா கொடுத்து வந்த மானியத்தை நிறுத்திவிடும். ஒபாமா நிர்வாகம் தான் சுமார் 27 கோடியே 75 லட்சம் நிதி வழங்கியது. அந்த ஆய்வுக்கூடத்திற்கு மிக விரைவில் அந்த நிதியை நிறுத்துவோம்” என கூறினார். அந்த ஆய்வுக் கூடத்திற்கான நிதியை நிறுத்த வேண்டும் என அமெரிக்க எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்  இரண்டு சபை தலைவர்களுமே வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |