Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கட்டுக்கடங்காத கூட்டம்…! ”இன்றைய விற்பனை ஓவர்” மதுக்கடைகள் மூடப்பட்டது …!!

தமிழகத்தில் இன்று தொடங்கிய மதுக்கடைகளின் நேரம் முடிந்ததால் அடைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மது பிரியர்கள் குவிந்திருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. 7ஆம் தேதி காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.

சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் நோய் கட்டுப்பாடு பகுதிகள் நீங்கலாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மதுப் பிரியர்கள் குவிந்திருக்கின்றன.

வாட்டி வதக்கும் வெயிலிலும், கொட்டிய மாழையிலும் காத்துக் கிடங்கு மதுபிரியர்கள் சரக்கை வாங்கிச் சென்றனர். பல இடங்களில் காலை கடை திறந்ததும் இனிப்பு வழங்கி, வெடிவெடித்து உற்சாகமாக இந்த நாளை கொண்டாடினர். சிலர் மது பாட்டிலை வாங்கியதும் அதற்க்கு முத்தமிட்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர். மாலை 5 மணி ஆனதால் இன்றைய விற்பனை நிறைவு பெற்றது.

Categories

Tech |