Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

வரப்போகும் மாப்பிள்ளை…. “இப்படித்தான் இருக்கணும்” எதிர்பார்ப்பை வெளிப்படுத்திய பிரபல நடிகை….!!


நடிகை நிவேதா தாமஸ் தனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தைவெளிப்படுத்தியுள்ளார்.

நிவேதா தாமஸ் சமுத்திரக்கனி இயக்கிய “போராளி” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் “ஜில்லா” படத்தில் விஜயின் தங்கையாக நடித்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான “பாபநாசம்” படத்தில் கமலின் மகளாகவும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ் நான்கு வருடங்களுக்கு பிறகு “தர்பார்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் “அனைவருக்கும் வாழ்க்கையில் காதலிக்க வேண்டும் எனும் அவசியமோ அல்லது திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனும் கட்டாயமோ இல்லை.

தற்போது எனக்கு திருமணம் பற்றிய எண்ணம் இல்லை, காதலிக்க நேரமும் இல்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடும் இருக்கிறேன். ஆனால் கணவராக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்பதில் சில எதிர்பார்ப்புகள் உண்டு. அவர் உண்மையாக இருக்கவேண்டும். அனைவரும் உண்மையாக இருப்பவர்களைத்தான் விரும்புவார்கள். நேரில் ஒரு மாதிரியும், இல்லாதபோது வேறு மாதிரியும் பேசுபவர்களை பிடிக்காது. எனக்கு கணவராக வருபவர் எனது பொறுப்புகளை பகிர்ந்து கொள்பவராகவும், பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.” என்று நிவேதா தாமஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |