Categories
அரசியல்

” தலைகீழாக நின்றாலும் தாமரை மலராது ” குஷ்பு விமர்சனம் ….!!

பிஜேபி தலைகீழாக நின்றாலும் தாமரை மலராது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடம்பெற்றுள்ளது . மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் நாகர்கோவிலில் தொடங்கியது. இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர் .

Image result for குஷ்பு

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு  செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது , ராகுல் காந்தி பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பேசியது  குறித்த கேள்விக்கு குஷ்பு கூறுகையில் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் தொகுதிகளின் பிரதிநிதித்துவம் பார்த்துதான் வேட்பாளர்களை அறிவிக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும்  பிஜேபி தலைகீழாக நின்றாலும் தாமரை மலராது என்று விமர்சனம் செய்த குஷ்பு பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்கு தமிழக அரசு , முதலமைச்சர் மற்றும் காவல்துறை அனைவரும் மன்னிப்பு கேட்கவேண்டும்  என்று கண்டித்தார்.

Categories

Tech |