கொரோனாவின் தீவிர தன்மையை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மாத்திரைகளை அறிமுகம் செய்துள்ளது.
கொரோனாவால் ஏற்படும் தீவிர பாதிப்பினை குறைப்பதற்காக மாத்திரைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தியாக இது அமையும் என்று பாராட்டியுள்ளார். மேலும் மாத்திரைகளை சந்தைப்படுத்துவதற்கு இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இருப்பினும் ஒமிக்ரான் அதிகரித்து வரும் காலகட்டம் என்பதால் பைசர் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை உடனடியாக வரவேற்பதாக கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஏற்கனவே ஒரு கோடி அமெரிக்கர்களுக்கு தேவையான மாத்திரைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.