ரஷ்யாவிடம் இருந்து S -400 ஏவுகணையை இந்தியா வாங்குவதால் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எந்த ஒரு நாடும் ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்க கூடாது. அப்படி வாங்கினால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டியது. ஆனால் மிரட்டலையும் மீறி ரூ. 40,000 கோடி மதிப்பில் ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா – இந்தியா இடையே கையெழுத்தானது. இப்போது ரஷியாவிடம் இருந்து S -400 ரக ஏவுகணைகளை வாங்குவதில் இந்தியா உறுதியாக முன்நோக்கி நகர்ந்தால் இந்தியா மற்றும் அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.