ஆனால் பின்னர் தான் உண்மை தெரியவந்துள்ளது. அந்த விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது. இதனை அமெரிக்க ராணுவமும் உறுதி செய்து விட்டது. அதே நேரம் விமானத்தில் பயணம் செய்தது எத்தனை பேர்?, அவர்களின் கதி என்ன? என்பது குறித்து அமெரிக்கா எதுவும் கூறாமல் இருந்தது.
இந்நிலையில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்து விட்டனர் என்றும், பலியானவர்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அதே சமயம் விமானம் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான எந்த வித அறிகுறிகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.