2019 ஆம் ஆண்டில் விற்பனையில் சாதனை படைத்த ஆல்பமாக அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் (Taylor Swift) “லவ்வர்”, பாடலுக்கு கிடைத்துள்ளது.
ஐ.எப்.பி.ஐ (IFPI) என்ற அமைப்பின் சார்பாக விற்பனையில் சாதனை புரிந்த செய்ததற்காக ஆல்பங்களை கண்டறிந்து அதனை பாடிய பாடகருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. இணையத்தில் நேரலையாக பார்ப்பது முதல் பயன்பாட்டை உலகளவில் விற்பனை செய்வது வரை அனைத்தையும் கணக்கிட்டு இந்த விருது வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான “லவ்வர்” பாடல் வெளியான முதல் வாரத்தில், 30 லட்சம் மக்களுக்கு சென்றடைந்தது. இதன் காரணமாக தான் தற்போது பாடகி ‘டெய்லர் ஷிப்ட்’ இந்த விருதுக்காக தேர்வாகியிருக்கிறார்.