ஒரு பெண் காவலர் தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் உத்தரபிரதேச முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுதம் புத்தா நகர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நொய்டாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சென்றபோது, ஆண்கள், பெண்கள் என ஏராளமான காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
அவர்களில் பிரீத்தி ராணி (Priti Rani) என்ற பெண் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர். எதற்க்காக ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் என்றால், அவர் தனது 1 1/2 வயது குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். தாய்மைக்கும் சரி, கடமைக்கும் சரி சமமான இடம் கொடுத்த இந்த பெண் காவலரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.