Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி…!! ”இப்போதைக்கு தயாராகாது” – கைவிரித்த WHO….!!

கொரோனா தொற்றை தடுப்பூசி இல்லாமல் எதிர்கொள்ள அனைவரும் தயாராகிக் கொள்ள வேண்டுமென உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கொரோனா தொற்று பல நாடுகளுக்கு பரவி பல உயிர்களை எடுத்துள்ளது. இந்நிலையில் தொற்றை தடுப்பதற்கான மருந்து விரைவில் உருவாகும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நாபோரோ எச்சரித்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த டேவிட் நாபோரோ அனைத்து வைரஸ்களுக்கு திறன்மிக்க தடுப்பூசிகள் உருவாக்குவதற்கான தேவைகள் ஏற்படாது. சில வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று.

எனவே இனிவரும் காலங்களில் தடுப்பு ஊசி இன்றி ஆபத்தை எதிர் கொள்வது எப்படி எனும் வழிகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தொற்று அறிகுறி இருந்தவர்களை தனிமைப்படுத்துதல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல், வயதானவர்களை பாதுகாப்பதும், அதிக அளவு நோயாளிகளை கையால கூடிய தேவையான ஏற்பாடுகளை செய்வது மிகவும் அவசியமானதாகும்.

உலகையே கதிகலங்க வைத்த கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்க பல ஆராய்ச்சி நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. சுமார் 44 தடுப்பூசிகள் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் இருக்கின்றது. முதல் தடுப்பூசி தயாராவதற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா, பெய்ஜிங் பயோ டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் போன்றவை முன்னணியில் இருக்கின்றது.

Categories

Tech |