திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வழக்கின் தீர்ப்பு வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உறுதியளித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் தேர்தலின் போது முறைகேடாக ஆளுங்கட்சி செயல்பட்டதாகவும் , ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது எப்படி வேட்பு மனுவில் கையெழுத்து பெறப்பட்டது , சுயநினைவு இல்லாத நிலையில் அவரின் கையெழுத்து பெற்றது குறித்து விசாரிக்க வேண்டும் அதுவரை அவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை விசாரணை நடைபெற்று வந்தது இந்நிலையில் அனைத்து விசாரணையும் முடிந்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இந்த சூழலில் தற்போது 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் வழக்கை காரணம் காட்டி மூன்று தொகுதிகளுக்கு திருப்பரங்குன்றம் , அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் அதில் , திருப்பரங்குன்றம் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலேயே அதிமுக MLA போஸ் இறந்துவிட்டார் . அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கின் தீர்ப்பு விசாரணை முடிந்து ஓராண்டு காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது இன்னும் வழங்கப்படவில்லை . தேர்தல் ஆணையம் வழக்கை காரணம் காட்டி தற்போது திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அறிவிக்கப்படவில்லை . எனவே இந்த வழக்கின் தீர்ப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஒரு வழக்கைத் தொடர்ந்தார் .
அதோடு தேர்தல் வழக்கின் காரணமாக இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை எனவே தான் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார் . இந்த சூழலில் இன்று மீண்டும் காலை இந்த வழக்கை விசாரித்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் ஒரு வழக்கை ஓராண்டு காலமாக எந்த ஒரு தீர்ப்பும் வழங்காத நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமைக்குள் பிறப்பிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார் .