தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வஸ்தா சாவடி அரசுப்பள்ளி அருகில் பிரேமா நாகராஜ் என்பவர் தன்னுடைய தாய் – தந்தையோடு வசித்து வருகின்றார். இந்த நிலையில் சொத்துப் பிரச்சனை காரணமாக பிரேமா நாகராஜிடம், வீட்டைக் காலிசெய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி அவரது உறவினர்கள் பலமுறை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததாகத் தெரிகிறது.
இந்த சூழலில் இன்று அதிகாலை அவரது வீட்டை உறவினர்கள் ஆத்திரத்தில் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதில் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி வீடு முற்றிலும் சேதமடைந்தது. நல்ல வேளையாக வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை..
அதனைத்தொடர்ந்து தஞ்சை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் தன்னுடைய வீட்டைத் தீவைத்து கொளுத்திய உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரேமா நாகராஜ் புகார் கொடுத்துள்ளார்.. இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தீ விபத்தில் சுமார் ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியிருப்பதாக அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.