Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளித்து விட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு… தலைமை காவலர் மீது பரபரப்பு புகார்..!!

வீட்டில் குடியிருக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக தலைமைக் காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் திருமணமான கலையரசி(30) என்ற பெண் செம்பியம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.. அந்தபுகாரில், ” எங்களது வீட்டின் உரிமையாளரின் பெயர் கண்ணன். இவர் வேப்பேரி போக்குவரத்து காவல் துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில், நேற்று குளியலறையில் இருந்து குளித்து விட்டு நான் வீட்டுக்குள் சென்ற போது, கண்ணன் எனக்கு பாலியல் தொந்தரவுஅளித்து, தகாத முறையில் நடக்கமுயன்றார்.. இதனால் நான் பயந்து போய் அருகிலிருந்த மற்றொரு வீட்டுக்குள் ஓடி ஒளிந்து விட்டேன். பின்னர் என்னுடைய கணவர் வந்தவுடன் நடந்தவற்றை கூறினேன்.

இதையடுத்து, என்னுடைய கணவரும், மாமியாரும் காவலர் கண்ணனுடன் வாக்குவாதம் செய்தனர்.. அப்போது அவர்கள் இருவரையும் தாக்கியது மட்டுமில்லாமல்  காவல் துறையில் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்று கண்ணன், கொலை மிரட்டலும் விடுத்தார்.

இதனிடையே அக்கம்பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மற்ற இரு பெண்களிடமும், கண்ணன் தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது. எனவே, தலைமைக் காவலர் கண்ணன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.. இந்த சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |