Categories
அரசியல் மாநில செய்திகள்

வீடியோ ரொம்ப ஷாக்கிங்…! இதுவும் திராவிட மாடல் தானா… அமைச்சரை கண்டித்த டிடிவி ..!!

உயர்கல்வித்துறை அமைச்சர் அரசு நிகழ்வில் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கட்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு கண்டன் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,

அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது.

பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறியிருந்தார். இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா?

மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ?! என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |