Categories
உலக செய்திகள்

ஆற்றில் மூழ்கியவரை காப்பாற்றும் குட்டி யானை… 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வைரல்..!!

தாய்லாந்தில் ஒரு சிறிய  யானைக்குட்டி ஒன்று ஆற்றில் மூழ்கியவரை ஓடிச் சென்று காப்பாற்றும் வீடியோ 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

தாய்லாந்து நாட்டில்  காம் லா என்ற இடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு உயிரியல் பூங்காவில் யானைகள் சில கூட்டாக ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தன.   அப்போது ஒருநபர்  தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்படுவது போல விளையாட்டாக செல்கிறார்.

Image result for Baby elephant thinks the man is drowning and jumps in to rescue him

இதனை  கண்ட அங்கிருந்த ஒரு குட்டி யானை ஒன்று விரைந்து சென்று தண்ணீருக்குள் இறங்கி அந்த நபரை தனது துதிக்கையால் பிடித்துக் கொண்டு கரையோரமாக தனது கால்களுக்கு நடுவே அவரை நிறுத்தி வைத்துக் கொள்கிறது.

Image result for Baby elephant thinks the man is drowning and jumps in to rescue him

இந்த வீடியோ வெளியானதும்  67,00,000 -த்திற்கும் அதிகமானோர் இதனை பார்த்து கமெண்ட் செய்தனர். இது அப்போதே (2016) வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதே வீடியோ மறுபடியும் வெளியாகி ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டும், பகிர்ந்தும், கருத்துக்ளை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.இது மீண்டும் வைரலாகி வருகிறது.

Categories

Tech |