Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற BMW கார்… மின்னல் வேகத்தில் வந்த மின்சார ரயில்… அப்பளமாக நொறுக்கிய பயங்கர வீடியோ!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதிய  திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினரால் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், மின்சார ரயில் வருவதன் காரணமாக ரயில்வே கேட் போடப்பட்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் கருப்பு நிற BMW கார் ஒன்று, மெதுவாக வந்து இடதுபுறமாக திரும்பி தண்டவாளத்தை  கடக்க முயன்றது.

Image result for The Los Angeles Police Department released video of a train hitting a car as the driver was crossing the tracks

அப்போது, மின்னல் வேகத்தில் அவ்வழியாக வந்த மின்சார ரயில் கார் மீது பயங்கரமாக மோதி தள்ளியபடி, சென்றது. நொடிப்பொழுதில் இச்சம்பவம் நடந்து விட்டது. இந்த கோர விபத்து கடந்த 3ம் தேதி நடந்துள்ளது. விபத்துக்குள்ளான கார் அப்பளமாக நொறுங்கிய நிலையில், அதை  ஓட்டி வந்தவர் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பார்ப்பதற்க்கே பயங்கரமாக இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Image result for The Los Angeles Police Department released video of a train hitting a car as the driver was crossing the tracks

மேலும் அந்நகர காவல்துறையினர் ட்விட்டரில் வீடியோவுடன் சேர்த்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் “அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் இது நம் அனைவருக்கும் ஒரு நல்ல நினைவூட்டலாக இருக்க வேண்டும். ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது அருகில் கவனம் செலுத்துங்கள், எல்லா போக்குவரத்து சிக்னல்களுக்கும் சாதனங்களுக்கும் எப்போதும் கீழ்ப்படியுங்கள்” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |