Categories
உலக செய்திகள்

“இது என்ன தன்னால நகர்ந்து போவுது”…. ஷாக்கான பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

அமெரிக்காவில் சூட்கேஸ் ஒன்று விமான நிலையத்தில் தானாக நகர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

விமான நிலையத்தில் பெரும்பாலும் திருட்டு சம்பவம் தான் அரங்கேறும். அதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்க விமான நிலையத்தில் அனைவரையும் மிரள வைக்கும் வகையில் சூட்கேஸ் ஒன்று எந்த வித துணையும் இல்லாமல் தானாக நகர்ந்து சென்றுள்ளது. அதனைக் கண்ட மக்களுக்கு இந்த சம்பவம் ஆச்சரியமாக இருந்துள்ளது.

அந்த சூட்கேஸ் ஒரே நேர்கோட்டில் எந்தவித துணையும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது பல வாகனங்கள் அந்த சூட்கேஸ் செல்லும் வழியில் முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ட்ரக் ஒன்று சூட்கேஸின் அருகே வேகமாக வந்தது. ஆனால் அந்த சூட்கேஸ் டிரக்கிடம் மாட்டிக்கொள்ளாமல் சாதுரியமாக தப்பிவிட்டது. தற்போது இந்த ஆச்சரியமான வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

Categories

Tech |