சேலத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பத்மாவதி நிறுவன ஊழியர்கள் பணத்தை வாங்கி கொண்டு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் தலைமை மருத்துவமனையில் டீன் அலுவலகம் அமைந்துள்ள வார்டுகளில் செவிலியர்கள் சரியாக பணியில் ஈடுபடவில்லை. இதையடுத்து அங்கு புதிதாக துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியில் பத்மாவதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊழியர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் இறக்கும் பணி செய்வது உள்ளிட்டவைகளில் பணத்தை வாங்கிக்கொண்டு ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் பணம் வாங்கி கொண்டு பணி செய்யும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுதொடர்பாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.