பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் முகத்தை மறந்துவிட்டு பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடும் காணொளி வெளியாகியுள்ளது
சமீபத்தில் பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் பதறியடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடும் காணொளி ஒன்று வெளியானது. காணொளியில் அவரது பதற்றத்தை பார்க்கும் பொழுது அவர் நடித்தது போன்று இல்லை. பதற்றமும் பயமும் அவரது முகத்தில் படர்ந்து உள்ளது தெளிவாகவே தெரிந்தது. இவ்வாறு பதட்டம் அடையும் அளவிற்கு அவர் எதை மறைந்தார் என்பது பலருக்கும் எழுந்து கேள்வியாகவே இருந்தது. பாரிஸில் நடந்த Bastille Day கொண்டாட்டத்திற்காக அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும் பங்கேற்க வந்து கொண்டிருந்தனர். அப்போது பிரெஞ்சு தொழில்துறையை சேர்ந்த அமைச்சர் ஆக்னஸ் தனது காரில் இருந்து புன்னகையுடன் இறங்குகிறார். ஆனால் காரை விட்டு இறங்கிய அடுத்த கணமே அவரது புன்னகை மறைந்து போகின்றது.
சட்டென பதட்டம் அடைந்தவர் தனது காரை நோக்கி ஓட அதற்குள் அவர் வந்து இறங்கிய கார் சென்றுவிட்டது. பின்னர் செக்யூரிட்டி ஒருவரை தொடர்புகொண்டு காரை திரும்ப அழைக்கும்படி கூறுகிறார். அவர் தனது அமைச்சர்களிடம் எதையோ சைகை மூலம் காட்டுகின்றார். அதன் பிறகே தெரியவருகின்றது அவர் தனது முக கவசத்தை காரிலேயே மறந்து வைத்துவிட்டது அவரது நல்ல நேரம் ஊழியர் ஒருவர் தன்வசம் வைத்திருந்த முக கவசத்தை அவரிடம் கொடுக்க அதன் பின்னரே அவரது முகம் தெளிவடைந்தது. 35 வினாடிகள் ஓடும் இந்த காணொளி ஒரு த்ரில்லர் குறும்படம் போன்றே அமைந்துள்ளது. பிரான்சில் நடக்கும் Bastille Day கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.