பட்டா மாற்ற வந்தவரிடம் 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதால் கிராமத்தின் நிர்வாக அலுவலரான செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திம்மம்பட்டி பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பாக அதே பகுதியில் 3 1/2 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இதனையடுத்து நிலத்தை பட்டாவை மாற்றுவதற்காக கிராமத்தின் நிர்வாக அலுவலரிடம் மூர்த்தி விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்கே அலுவலர் இல்லாத நிலையில் மற்றொரு கிராமத்தின் நிர்வாக அலுவலரான செல்வம் என்பவர் கூடுதலாக இப்பணியை கவனித்து வந்துள்ளார்.
இதில் மூர்த்தி தனது பட்டாவை மாற்றுவது பற்றி தற்போது அலுவலரான செல்வத்திடம் கேட்டுள்ளார். அப்போது 3,000 லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா மாற்றி தருவதாக அவர் கூறியுள்ளார். அதற்கு மூர்த்தி இவ்வளவு பணம் என்னால் தர முடியாது என கூறிய நிலையில் 2,500 கொடுக்குமாறு அவர் கேட்டுள்ளார். அதனால் முதல் தொகையாக 500 ரூபாயை மூர்த்தி அவரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் லஞ்சம் கொடுக்க விரும்பாத மூர்த்தி இது பற்றி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் படி லஞ்ச ஒழிப்பு துணை காவல்துறை சூப்பிரண்டு மூர்த்திடம் ரசாயன பவுடர் தடவிய 2000 ரூபாயை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பணத்தை அலுவலர் செல்வத்திடம் மூர்த்தி கொடுக்கும் போது மறைவாக இருந்த காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.