ஐஸ் பக்கெட் சவால், பாட்டில் மூடி சவால் வரிசையில் நியூ பிளக்ஸ் என்ற புதிய சவால் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் ஐஸ் பக்கெட் சவால் வைரலானது. இதில் பக்கெட் முழுவதும் உள்ள குளிர்ந்த நீரை எடுத்து அப்படியே தன் மீது ஊற்றிக்கொள்ள வேண்டும்.
அதை தொடர்ந்து பிரபலமான மற்றொன்று தான் ,காரை மெதுவாக நகர விட்டு அந்த காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆட வேண்டும். இதையடுத்து பிட்னஸ் சவால் வைரல் ஆனது. பிரதமர் மோடி முதல் இந்திய கேப்டன் விராட் கோலி வரை இந்த சவாலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தற்போது ட்ரெண்டாகி வருகிறது பிளக்ஸ் சேலஞ்ச் என்ற ஒன்று வருகிறது.இந்த சவால் விதிகளின் படி தரையில் குப்புற படுத்து கைகளை பின்புறமாக கட்டிக்கொள்ளவேண்டும். பின்னர் கைகளின் உதவி இல்லாமல் கால்களை உந்தி தள்ளி தரையில் இருந்து மேலே எழுந்திருக்கவேண்டும்.
உடல் வலுவை நிரூபிப்பதற்காக படுத்துக்கொண்டே செய்ய வேண்டிய இந்த சவாலை பலர் முயற்சித்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.