Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவை கவர்ந்த ரசிகர்களின் வைரல் வீடியோ…. அவரே வெளியிட்ட பதிவு இதோ….!!!

சூர்யாவை கவர்ந்த ரசிகர்களின் வைரல் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது எதற்கும் துணிந்தவன், வாடிவாசல், பீம்ஜி உள்ளிட்ட திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் பீம்ஜி திரைப்படமும் கூடிய விரைவில் வெளியாக இருப்பது சூர்யா ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சூர்யா தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர் “அயன்” படத்தின் பாடலுக்கு அவர் ஆடியது போலவே நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வைரல் வீடியோவை கண்ட நடிகர் சூர்யா இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து “Loved it” என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |