Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”தொழிலில் அபரித வளர்ச்சி” வீண் ஆசை உண்டாகும் …!!

கன்னி ராசி அன்பர்களே…..!! இன்று தாமதமான செயலில் அனுகூலப் பலன்கள் தேடும் வரக் கூடும். உங்களின் தனித்திறமையை பலரும் அறிந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும் , பணப்பரிவர்த்தனை சீராக இருக்கும். வாகனத்தில் கூடுதல் வசதி பெற தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள்.இன்று மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமான காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும்.

வீண் ஆசைகள் மனதில் தோன்றும் , மன கஷ்டம் குறையும். ஆனால் செலவு கொஞ்சம் அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படலாம். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை கொஞ்சம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு பாடங்களைப் படியுங்கள். அப்போதுதான் பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த உணவை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |