ஜெர்மனில் பிரிட்டன் வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஜெர்மனில் முன்பு உருமாறிய வைரஸ் பாதித்தவரின் சதவீதம் 6 சதவீதமாக இருந்தது. தற்போது அது 22 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்பிருந்த வைரஸ்களை விட என்ற பி.1.1.7 என்ற பிரிட்டன் வைரஸ் ஜெர்மனியில் ஆதிக்கம் செலுத்தும் என்று சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் எச்சரித்துள்ளார்.
தற்போது உருமாறிய வைரஸ் பரவி வந்தாலும் நோய்த் தொற்றின் புள்ளிவிவரங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது சற்று ஊக்கம் அளிப்பதாகவும் கூறினார். வரும் மார்ச் மாதம் முதல் அனைவருக்கும் இலவச கோவிட்-19 பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.