தனது தொகுதி மக்களை மீட்க இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பணியாற்றிய பாஜக எம்எல்ஏக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
அசாமில் சென்ற ஒரு வாரமாக மிக கன மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏராளமான நெடுஞ்சாலைகள் மழை நீரில் மூழ்கி உள்ளதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன. மேலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்குமாறு அம்மாநிலத்தின் முதல்வர் சர்வானந்த சோனோவால் உத்தரவு கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் பாஜக எம்எல்ஏ மிரினால் சாக்கியா, நேற்று தனது கும்தாய் பகுதியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை பார்வையிட காரில் சென்றிருந்தார். அப்போது, அவர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களையும், கால்நடைகளையும் மீட்டெடுத்தார். தனது தொகுதி மக்களுக்காக களத்தில் இறங்கி பணிபுரிந்த எம்எல்ஏ சாக்கியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. இந்த குறித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.