Categories
சினிமா தமிழ் சினிமா

கெத்தான லுக்… புத்தாண்டில் மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ விஜய்… கொண்டாடும் ரசிகர்கள்.!

லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘தளபதி 64’. படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவித்தவுடனே படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. படத்தின் தலைப்பு இன்னும் வைக்கப்படாமல் இருந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டது.

vijay starrer master movie first look poster released

இந்நிலையில் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. மேலும் படத்திற்கு ‘மாஸ்டர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் படத்தின் போஸ்டர் வைரலாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வ்ருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் சமீபத்தில் வெளியாகி பிகிலுக்கு இணையாக நின்றது. சொல்லப்போனால் பிகிலை தூக்கி சாப்பிட்டது என்றே சொல்லலாம். ஆகவே இந்த மாஸ்டர் படத்தின் மீது எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

Categories

Tech |