இளம்பெண் ஒருவரை கோவிலில் வைத்து கும்பல் ஒன்று பாலியல் பலத்தகாரம் செய்துள்ளது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த கோவிலுக்குள் தூக்கி சென்றுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை தாக்கிய அந்த கொடூர கும்பல் கோவிலில் வைத்து கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அந்தக் கும்பல் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த பெண்ணின் சகோதரியின் வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் வைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.