Categories
உலக செய்திகள்

மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம் : அதிக நிதி கேட்ட டிரம்ப்….. கொடுக்க மறுத்த ஜனநாயகக் கட்சி…!!

மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம் தொடர்பாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதற்கான  வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் சமூக விரோதிகள், அகதிகள் நுழைவதை தடுப்பதற்கு   சுவர் எழுப்புவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபகாலமாக ஜனநாயக  கட்சியினரிடம் வற்புறுத்தி வருகிறார். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு அதிக செலவு ஏற்படும் என்பதால், இத்திட்டத்திற்காக அதிபர் டிரம்ப் கேட்ட நிதியை தங்களால் ஒதுக்க முடியாது என ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர். இந்த அறிவிப்பையடுத்து  நாட்டின் தெற்குப் பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

Image result for The wall raising issue on Mexico border

இந்நிலையில் அதிபர் டிரம்பின் இந்த நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில்   அதிபருக்கு  ஆதரவாக 182 பேரும், அதிபருக்கு எதிராக 245 பேரும் வாக்களித்தனர். அதிபர் டிரம்ப் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளாததால் அவருக்கு  உண்டான சிறப்பு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தார். இந்நிலையில், அதிபர் டிரம்பின்  வீட்டோ அதிகாரத்தை அனுமதிக்கலாமா?அல்லது  வேண்டாமா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வரும் மார்ச் 26 ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |