முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செம்பரம்பாக்கம் ஏரியை நேரடியாக பார்த்தார். ஏரியில் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு எந்த மாதிரி நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி ஆக இருக்கிறது. தற்போது 22 அடியை செம்பரம்பாக்கம் ஏரி தொட்டுள்ளது. 12 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரம் கனஅடி ஆனது தற்போது திறக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து படிப்படியாக நீர் அளவு அதிகரிக்கும் என்று தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் கையில் குடை பிடித்துக் கொண்டு, கொட்டும் மழையிலும் செம்பரம்பாக்கம் ஏரியில் நேரடியாக சென்று பார்வையிடுகிறார். திறந்து விடப்படும் தண்ணீர் அடையாறு ஆற்றின் வழியாக கடலில் கலக்கும் என்பதால் சென்னை மாநகராட்சி அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.