Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டி மீது ஏறிய பேருந்து சக்கரம்… பரிதாபமாக பறிபோன உயிர்… டிரைவர் மீது வழக்குபதிவு…!!

பேருந்தில் இருந்து கீழே இறங்கும் போது கீழே தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி உள்ள காரங்காடு கிராமத்தில் சேவியர் என்பவர் அவரது மனைவி அன்னபாக்கியத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அன்னபாக்கியம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்காக தொண்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பொருள்களை வாங்கிவிட்டு மீண்டும் அரசு பேருந்தில் காரங்காடு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இறங்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக படியில் இருந்து தவறி கீழே விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தொண்டி காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கவனக்குறைவாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |