‘ஒமிக்ரான்‘ வைரஸ் வரும் காலங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஒமிக்ரான்’ வைரஸ் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆய்வாளர்கள் சிலர் டெல்டா வைரசை விட ‘ஒமிக்ரான்’ வைரஸ் லேசான பாதிப்பை ஏற்படுத்தினாலும் பல மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக கூறுகின்றனர். இதன் காரணமாக வரும் காலங்களில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
மேலும் உலக சுகாதார அமைப்பு ஒமிக்ரான் வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஒமிக்ரான் அச்சம் காரணமாக புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.