Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொண்டு வா”… இரக்கமின்றி அடித்து கொடுமைப்படுத்திய கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு!

உத்தமபாளையம் அருகே வரதட்சணை கேட்டு கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனவேதனையில் மனைவி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாட்டில் சில பெண்கள் திருமணம் முடிந்த பின்  மறுவீட்டிற்கு போன பிறகு வரதட்சணை கொடுமையால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வரதட்சணை போதாது என்று கேட்டு கணவன் மற்றும் மாமியார்- மாமனார்  அடித்து உதைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். எல்லோருமே அப்படி இருக்க மாட்டார்கள்.. ஒருசிலரின் இந்த கொடுமையால்  மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படும் பெண்கள் வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அந்த வகையில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே இருக்கும் பல்லவராயன்பட்டியைச் சேர்ந்தவர்கள் கோட்டைச்சாமி மற்றும் ராணி  தம்பதியின் மகன் சதீஷ்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் கண்ணகி தம்பதியின் மகளான லாவண்யாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

அந்த ஜோடிக்கு தற்போது 2 வயதில் அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனதளவில் வேதனையடைந்த லாவண்யா அரளி விதையை அரைத்து குடித்துள்ளார்.

இதையடுத்து உயிருக்குப் போராடி கொண்டிருந்த மனைவி லாவண்யாவை உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அவரது கணவர் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். அதன்பின்  அவரது உடல் உடற்கூறாய்விற்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே லாவண்யாவின் பெற்றோர்  சொத்தில் பங்கு வாங்கித்தர வேண்டும் என்றும், வரதட்சணை வேண்டும் என்று கேட்டும் அடித்து சித்ரவதை செய்து துன்புறுத்தியதால் தான் எங்களது மகள் தற்கொலை செய்துகொண்டார் என காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சதீஷ் குமார் மற்றும் அவரது பெற்றோர் கோட்டைச்சாமி -ராணி ஆகியோரைக் கைதுசெய்தனர். இது குறித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் விசாரணை நடத்திவருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |