Categories
தேசிய செய்திகள்

“புது ஆடை வாங்கி வராத மனைவி” முத்தலாக் கூறிய கணவன்..!!

உத்தர பிரதேசத்தில்  புது ஆடை வாங்கி கொண்டு போகாததால் மனைவியிடம் சிறையில் இருக்கும் கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா  மாவட்டத்தில் வசித்து வரும் பெண் ஒருவர், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது கணவனை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் தனக்கு பக்ரீத் பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி வரும்படி கூறியுள்ளார். ஆனால் இவர் புது ஆடை வாங்கி கொண்டு செல்லவில்லை. இதனை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு அவர் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார்.

Related image

இது இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கும் எனது கணவருக்கும் புதிய ஆடை வாங்குவது  தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. என்னுடைய கணவர் புது ஆடை வாங்கி வரும்படி கூறினார். ஆனால் என்னிடம் காசு இல்லாத காரணத்தால் என்னால் வாங்கிக் கொண்டு போக முடியவில்லை. அதனால் நான் சந்திக்கும் போது என்னிடம் தலாக் கூறி விவாகரத்து செய்தார். நான் என்னுடைய உறவினர்களை அழைத்து சென்றேன் அப்போது மீண்டும் அவர் முத்தலக் கூறினார்.

Image result for Talaq

இதையடுத்து தான் நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் காவல்துறையினர் எனது கணவர் மீது இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தார். மத்திய அரசு இஸ்லாமிய பெண்களின் திருமணத்தை பாதுகாக்கும் வகையில் சமீபத்தில் தான் முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் சட்டம் இயற்றப்பட்ட பின் இது 8- ஆவது வழக்காக  பதிவு செய்யப்படுவது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |