நாகர்கோவிலில் பெண் ஒருவர் வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து கள்ளக்காதலனுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தது மட்டுமில்லாமல் தனது கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்த காயத்ரி (31)-கணேஷ் (35) தம்பதியினர். இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது முடிந்த நிலையில்; இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் கணேஷின் வீட்டிற்குள் 2 மர்ம நபர்கள் புகுந்து இரும்பு கம்பியால் கண்முடித்தனமாக கணேஷை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதை கண்ட அவரின் மனைவி காயத்ரி அலறியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கணேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் அவருக்கு நினைவு திரும்பியது.
இந்நிலையில் விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு அவரின் மனைவி மீது சந்தேகம் எழுந்தது. இதனைத்தொடர்ந்து காயத்ரியின் செல்போன் பதிவுகளை ஆராய்ந்தனர். அதில், செட்டி குளத்தில் மழலையர் பள்ளி நடத்தும் யாசின் என்பவருடன், காயத்ரி அடிக்கடி பேசியது தெரிந்தது.
போலீஸின் கிடுக்கு பிடி விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளிவந்தது, அதாவது திருமணத்துக்கு முன்பே யாசின்- காயத்ரி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதின் பெயரிலேயே கணேஷை, காயத்ரி திருமணம் செய்துகொண்டுள்ளார். பின்னர் யாசின் நடத்தும் மழலையர் பள்ளியில் காயத்ரி வேலைக்குச் சேர்ந்து தனது காதலை தொடர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் யாசினிற்கு தனது கணவர் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை யாசின் திருப்பி கொடுக்கவில்லை. பத்திரத்தை கேட்டு கணேஷ் தனது மனைவிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இது குறித்து யாசினிடம் காயத்ரி கூறியுள்ளார், இதனைத்தொடர்ந்து இருவரும், கணேஷை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு ரூ.4 லட்சத்திற்கு இரண்டு கூலிப்படையினரை நியமித்து கணேஷை தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்.
கள்ளக்காதலனுக்கு கணவரது பணம் ரூ.10 லட்சம் கொடுத்தது மட்டுமில்லாமல், அவரையே கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்ற மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.