கணவனுக்கு கண்டம் இருப்பதாகக் கூறி 5 ஆயிரம் ரூபாயை வாங்கி சென்ற ஜோசியர் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை ஆதம்பாக்கம் அடுத்து இருக்கும் வாணுவம்பேட்டையைச் சேர்ந்த தம்பதியினர் பழனி-வள்ளி வீட்டில் தனியாக இருந்த சமயம் குறி சொல்ல வந்ததாக கூறி ஜோசியர் ஒருவர் பழனிக்கு வாகனத்தில் கண்டம் இருப்பதாகவும் அதனை சரி செய்ய 5 ஆயிரம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து கணவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் ஜோசியர் கேட்ட 5 ஆயிரத்தை வள்ளி கொடுத்துள்ளார். அதன் பிறகு இதுகுறித்து பழனிக்கு தெரியவர அவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஜோசியர் ஒருவர் தனது மனைவியை ஏமாற்றி 5000 ரூபாய் வாங்கி சென்றதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அதில் கணவனுக்கு கண்டம் இருப்பதாக கூறி சாதுரியமாக ஏமாற்றி பணத்தை பறித்துச் சென்ற ஜோசிய கோவிலம்பாக்கத்தில் சேர்ந்த ஜோசியர் குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரை கைது செய்து வேறு யாராவது ஏமாறி உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.