திருநெல்வேலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் அடுத்துள்ள அழகனாபுரத்தை சுமித்ரா சுதா(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்ட காரணத்தினால் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கத்தினால் காற்று வரவில்லை என இரவு பின்பக்க கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார்.
இதனையடுத்து நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் சுமித்ராவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து சுமித்ரா ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருடிய மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.