உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போச்சம்பள்ளியை சேர்ந்தவர் மாதுவின் மனைவி கீதா. இவர் பல நாட்களாக வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். எத்தனையோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகாத நிலையில் மனவருத்தத்தில் இருந்துள்ளார் கீதா. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த கீதா பூச்சி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். இதை அறிந்த குடும்பத்தினர் கீதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். முதலுதவி கொடுத்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் ஆனால் அங்கும் சிகிச்சை எதுவும் பலனின்றி கீதா உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.