Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மருத்துவர்கள் அலட்சியம்?… குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு… உறவினர்கள் போராட்டம்..!!

மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை பெற்ற பெண் இறந்து விட்டதாகக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.வி.ஆர். நகர் 2ஆவது வீதியைச் சேர்ந்தவர் பாண்டி.. இவருக்கு மணியாள் என்ற மனைவி உள்ளார்.. மணியாள் 2 நாள்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை ஓன்று பிறந்தது.

தாய் சேய் இருவரும் நலமுடன் இருந்த நிலையில், நேற்று இரவு தாய் மணியாளுக்கு திடீரென்று இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர்கள் யாரும் இல்லை.. இதனால் வழியின்றி செவிலியர் மருத்துவம் பார்த்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதனையறிந்த அவரது உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார்  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்துசென்றனர்.. குழந்தை பெற்றெடுத்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Categories

Tech |