திடீரென பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுர்மோட்டூர் மற்றும் சோளிங்கர் தாலுகா பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சந்தியாவிற்கு பிரசவ வலி திடீரென ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் சந்தியாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அதன்பின் எரும்பி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது வலி அதிகமானதால் ஆம்புலன்ஸை நிறுத்தி மருத்துவ உதவியாளர் பிரியா சந்தியாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார். அதில் சந்தியாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து தாய் மற்றும் குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.