Categories
தேசிய செய்திகள்

“தலைமுடி கொட்டியதால் பெண் கிடைக்கவில்லை”…. விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. கேரளாவில் பரபரப்பு.‌‌….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் வடக்கு கண்ணூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசாந்த் (29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் முதல் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தலைமுடி உதிர்வுக்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் பல வருடங்களாக சிகிச்சை அளித்தும் வாலிபருக்கு தலைமுடி உதிர்வு நிற்கவில்லை. இது குறித்து மருத்துவரிடம் வாலிபர் பலமுறை புகார் தெரிவித்துள்ளார். இதனால் வாலிபருக்கு மருத்துவர் சில மாத்திரைகளை எழுதி கொடுத்து சாப்பிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்‌.

அந்த மாத்திரைகளை சாப்பிட்ட வாலிபருக்கு கண் புருவத்தில் இருந்தும் முடி உதிர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் 29 வயது ஆகியும் தனக்கு பெண் கிடைக்காததற்கு காரணமும் தலைமுடி முதிர்வு தான் என்று வாலிபர் நினைத்துள்ளார். இதனால் மனமுடைந்த வாலிபர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் தன்னுடைய மரணத்திற்கு காரணம் மருத்துவர் தான் என்று எழுதியுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாலிபரின் குடும்பத்தினர் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |