Categories
உலக செய்திகள்

“சொல்ல சொல்ல கேக்காம”…. எதுக்குமா இப்படி பண்ற….? நடுவானில் அலறிய பயணிகள்….!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவர் செய்த செயலால் பயணிகள் அலறியுள்ளனர்.

நியூயார்க் மாகாணத்தின் சைராகியூஸ் நகரிலிருந்து ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நோக்கி பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் திடீரென தனது செல்லப்பிராணி பூனைக்கு தாய்பால் கொடுக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் பூனையோ அந்த பெண்ணின் செயலால் ஆக்ரோஷமாக கத்தியுள்ளது. அதனை கண்டு அலறிய சகபயணிகள் அந்தப் பெண்ணிடம் தாய்பால் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் யாருடைய பேச்சையும் கேட்காத அந்த பெண் தொடர்ந்து தாய்பாலை கொடுக்க தொடங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் இதுகுறித்து விமான பணியாளர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விமான பணிப்பெண்கள் வந்து அந்தப் பெண்ணிடம் பால் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து தனது வேலையை செய்து கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் செயல் குறித்து தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் அமைப்பின் மூலம் தரைக்கட்டுபாட்டு பிரிவினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானம் அட்லாண்டா விமான நிலையத்தில் தரை இறங்கிய பிறகு விசாரணைக்காக அந்த பெண்மணி தனியாக அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் முடி இல்லாத அந்த பூனை ஒரு துணியில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்ததால் சக பயணிகளுக்கு அது குழந்தை போலவே தெரிந்துள்ளது. இருப்பினும் ஒரு பூனை விஷயத்திற்காக தரைக்கட்டுப்பாட்டு பிரிவினரிடம் விமானிகள் புகார் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |