பெண் ஒருவர் காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்ததால் விசாரணையில் வெளியான சுவாரசிய தகவலை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் பெஷல் ஸ்டாட்ட் என்ற மண்டலத்தை சேர்ந்த ஒரு பெண் தொலைபேசி வழியாக காவல் துறையினரை அழைத்து தன் குடியிருப்பிற்கு அருகில் நாய் ஒன்று வெகுநேரமாக இருப்பதாகவும், பார்க்க பரிதாபமாக இருப்பதாகவும் கவலை தோய்ந்த குரலில் தெரிவித்துள்ளார். அந்த நாய் ஆபத்தில் சிக்கி இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதியுள்ளனர்.
அதனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கலாம் என முடிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நாய் இருப்பதாக கூறப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரித்ததில் அது நாய் அல்ல நாய் வடிவில் இருந்த தலையணை என்பது தெரியவந்தது. சுவாரசியமான இச்சம்பவத்தை பகிர்ந்துகொண்ட காவல்துறையினர் பெண்ணின் இச்செயல் மிகவும் சரியானது என பாராட்டியுள்ளனர்.