Categories
உலக செய்திகள்

“ஆச்சர்யம்!”.. 52 தடவை ஏலியனால் கடத்தப்பட்ட பெண்..? பரபரப்பு தகவல்..!!

பிரிட்டனில் 50 வயது பெண் ஒருவர் வேற்றுகிரகவாசிகள் தன்னை 52 தடவை கடத்திச்சென்றதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷைரில் உள்ள ப்ராட்ஃபோர்டு என்ற நகரில் வசிக்கும் 50 வயது பெண் பவுலா ஸ்மித். போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் இவர், சிறுவயதிலிருந்து 52 தடவை வேற்று கிரகவாசிகள் தன்னை கடத்தி சென்றதாகவும் அவர்களது விண்கலத்தில் பயணித்திருப்பதாகவும் கூறுகிறார்.

அதாவது முதன்முதலில் கடந்த 1982 ஆம் வருடம் குழந்தையாக இருந்த போது தன்னை கடத்தி சென்றதாகவும், பூமராக் போல விண்வெளி கப்பலை கண்டதாகவும், வேற்று கிரகவாசிகள் பூமியில் கிடைக்காத ஒரு தொழில்நுட்பத்தை தன்னிடம் காட்டினார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் பூமி அழிவது தொடர்பான புகைப்படங்களின் தொகுப்பை காட்டியதாகவும் கூறுகிறார்.

அவர் பார்த்த வெள்ளை நிற ஏலியனை வரைந்து காட்டுகிறார். மேலும் கடத்திவிட்டு பூமிக்கு அனுப்பும் போது கைகளில் முத்திரைகளை அவர்கள் குத்தியதாக காட்டுகிறார். இதனை தற்போது வரை எவரிடமும் கூறியதில்லை என்றும் அப்படி கூறினால் என்னை பைத்தியம் என்று கூறுவார்கள் என்கிறார்.

ஆனால் என்னை போன்றவர்கள் மில்லியன் கணக்கில் இல்லை, எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அனுபவத்தை பெற்றிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |